Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பெங்களூருவில் 68 வயது மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய முன்னாள் அரசு ஊழியர்

பெங்களூருவில் 68 வயது மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய முன்னாள் அரசு ஊழியர்

By: Karunakaran Fri, 10 July 2020 1:13:01 PM

பெங்களூருவில் 68 வயது மனைவியை சந்தேகப்பட்டு தாக்கிய முன்னாள் அரசு ஊழியர்

பெங்களூரு ஜெயநகரில் வசித்து வரும் 75 வயது முதியவருக்கு 68 வயது மனைவி உள்ளனர். இந்த முதியவர் அரசு ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இவர்களின் வீட்டின் முதல் மாடியில் 35 வயதுடைய வாலிபர் தனது மனைவியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த வாலிபரின் மனைவி கர்ப்பமாக உள்ளதால், பிரசவத்திற்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றிருந்தார்.

இந்நிலையில் அந்த வாலிபர் மூதாட்டிக்கு வீட்டு வேலை செய்வது போன்ற வேலைகளை செய்து வந்தார். கொரோனா காரணமாக வெளியே செல்ல முடியாததாலும், வயதாகி விட்டதாலும் மூதாட்டிக்கு அவர் உதவி செய்துள்ளார். இதனால் அந்த மூதாட்டியின் கணவர் தனது மனைவிக்கும் அந்த வாலிபருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகமடைந்துள்ளார்.

bangalore,former civil servant,assault,counterfeit contact ,பெங்களூர், முன்னாள் அரசு ஊழியர், தாக்குதல், கள்ள தொடர்பு

இதனால் தனது மனைவியுடன் தகராறு செய்து, அவரை முதியவர் அடித்து, உதைத்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள மகளிர் உதவி மையத்திற்கு தொடர்பு கொண்டு மூதாட்டி புகார் அளித்துள்ளார். வாடகைக்கு வசிக்கும் வாலிபரை தனது மகன் போல நினைத்து பழகியதை அவரது கணவர் தவறாக நினைத்து தாக்குவதாக கூறியிருந்தார்.

இதுகுறித்து அதிகாரி சரஸ்வதி கூறுகையில், மூதாட்டி மீது சந்தேகப்பட்டு அவரது கணவர் தாக்கியதாகவும், ஆனால் மூதாட்டி அந்த வாலிபரை தனது மகன் போன்றவர் என கூறியதாகவும், இந்த விவகாரத்தில் முதியவருக்கு தவறான புரிந்துணர்வு ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

Tags :