Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

By: vaithegi Sun, 03 Sept 2023 2:56:14 PM

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

இந்தியா : காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டடு வுள்ளது.

எனவே இதன் காரணமாக அவர் டெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

sonia gandhi,hospital,congress party ,சோனியா காந்தி, மருத்துவமனை,காங்கிரஸ் கட்சி

சோனியா காந்தியின் உடல்நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து கொண்டு வருகின்றனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் சோனியா காந்தி உள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் சர் கங்காராம் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து சோனியா காந்தி விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என தலைவர்கள் பலரும் அக்கரை தெரிவித்து உள்ளனர்.

Tags :