Advertisement

முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்

By: Nagaraj Thu, 24 Sept 2020 8:51:51 PM

முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் காலமானார்

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் இன்று காலமானார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரரும், வர்ணனையாளருமான டீன் ஜோன்ஸ் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. மும்பையில் இருந்தபோது அவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் போட்டிகள் கடந்த 19ம் தேதி தொடங்கிய நிலையில், இதற்கான பணிகளுக்காக அவர் மும்பையில் இருந்துள்ளார்.

australia,former cricketer,dean jones,has passed away ,ஆஸ்திரேலியா, முன்னாள் கிரிக்கெட் வீரர், டீன்ஜோன்ஸ், காலமானார்

அவர் உயிரிழந்ததையடுத்து ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாரடைப்பு ஏற்படுவதற்கு முன்பு, அவரது உடல்நிலை சீராக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால், மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது மறைவு சோகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டார் இந்தியா தெரிவித்துள்ளது. அவரது மரணம் தொடர்பாக ஆஸ்திரேலிய தூதரகத்துடன் தொடர்பில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Tags :