Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி

நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி

By: Nagaraj Thu, 02 Mar 2023 12:22:10 PM

நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி

நைஜீரியா: தேசிய தேர்தல் ஆணையம் அறிவிப்பு... நைஜீரியாவின் ஜனாதிபதி தேர்தலில், லாகோஸ் மாகாண முன்னாள் ஆளுநர் போலா டினுபு வெற்றி பெற்றதாக நைஜீரியாவின் சுதந்திர தேசிய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

கடந்த 25ஆம் திகதி நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க ஜனாதிபதி தேர்தலில், 36.61 சதவீத வாக்குகளைப் பெற்ற ஆளும் கட்சியைச் சேர்ந்த வேட்பாளரான டினுபு வெற்றிபெற்றார்.

1999இல் நாடு ஜனநாயக ஆட்சிக்கு திரும்பியதில் இருந்து நைஜீரியாவின் ஐந்தாவது ஜனாதிபதியாக டினுபு பதவியேற்கவுள்ளார்.

state,change,pride,economic hub,bola tinubu,ex-governor ,மாநிலம், மாற்றம், பெருமை, பொருளாதார மையம், போலா டினுபு, முன்னாள் ஆளுநர்

மிகக் கடுமையான போட்டி நிலவிய இந்தத் தேர்தலில் போலாவுடன் அடிகு அபுபக்கர், பீட்டர் ஓபி, ரபிபு வாஙக்வாசோ ஆகியோர் போட்டியிட்டனர். இவர்கள் 25 மாகாணங்களில் அதிக வாக்குகளை பெற்றனர்.

71 வயதாகும் டினுபு, 1999 மற்றும் 2007க்கு இடையில் லாகோஸில் ஆளுநராக இருந்தார், அங்கு அவர் தற்போது நைஜீரியாவின் பொருளாதார மையமாக இருக்கும் மாநிலத்தின் மாற்றத்திற்கு வழிவகுத்த முன்னோடி சீர்திருத்தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

Tags :
|
|
|