Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

By: Karunakaran Tue, 04 Aug 2020 2:19:22 PM

கர்நாடக முன்னாள் முதல் மந்திரி சித்தராமையாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி

கர்நாடக மாநிலத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கர்நாடகாவில் கொரோனா வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 1.35 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, இதுவரை 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

கர்நாடகாவில் முதல் மந்திரி எடியூரப்பா தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக எடியூரப்பா அடிக்கடி அதிகாரிகளுடன் ஆலோசனைகள் நடத்தி வந்தநிலையில் தற்போது முதல் மந்திரி பிஎஸ் எடியூரப்பா மற்றும் அவரது மகள் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

karnataka,chief minister,chidramaiah,corona virus ,கர்நாடகா, முதல்வர், சித்ராமையா, கொரோனா வைரஸ்

தற்போது இருவரும் கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், கர்நாடக முன்னாள் முதல் மந்திரியும், எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

கர்நாடகா தலைநகர் பெங்களூரில் கொரோனா தாக்கம் அதிகரித்து கொண்டே வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்புடையவர்களுக்கு சிகிச்சை அளிக்க பெங்களூரில் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டிகள் எழுந்து வருகின்றன. இருப்பினும் அங்கு கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது அங்குள்ள மக்களை பீதியடைய செய்துள்ளது.

Tags :