Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

By: Nagaraj Tue, 18 July 2023 11:13:49 AM

கேரளாவின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்

கேரளா: கேரளா முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி உடல்நலக்குறைவால் காலமானார்.

கேரள மாநில காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான உம்மன்சாண்டி இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். ஏற்கனவே அவருக்கு கேன்சர் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் இருந்து வந்தன. எனினும் அவருக்கு குடும்பத்தினர் சரியாக சிகிச்சை அளிக்காமல், பிரார்த்தனை மட்டும் செய்வதாக குற்றச்சாட்டு எல்லாம் எழுந்தது.

இந்த நிலையில் கேரள அரசு மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் தலையிட்டு, உம்மன்சாண்டிக்கு திருவனந்தபுரத்திலும் அதனைத்தொடர்ந்து பெங்களூரில் உள்ள மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

kerala,former chief minister,ill health,passed away,ooman chandy ,கேரளா, முன்னாள் முதல்வர், உடல்நலக்குறைவு, காலமானார், உம்மன் சாண்டி

மருத்துவமனையில் சிகிச்சை முடித்து வந்த உம்மன்சாண்டி, அடிக்கடி பெங்களூரு மருத்துவமனையில் உடல்நிலை பரிசோதனைக்காக சென்று வந்தார்.

இந்த நிலையில் பெங்களூரு சின்மயா மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சென்ற உம்மன்சாண்டி, இன்று அதிகாலை 4.30 மணியளவில் காலமானார். இந்த தகவலை உம்மன் சாண்டியின் மகன் சமூக வலைதளம் மூலம் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் புதுப்பள்ளி தொகுதியில் தொடர்ந்து 50 ஆண்டுகள் எம்.எல்.ஏ-வாக இருந்திருக்கிறார் உம்மன் சாண்டி. அதனால் திருவனந்தபுரத்தில் தான் கட்டிய வீட்டுக்கு 'புதுப்பள்ளி' என பெயர் வைத்திருக்கிறார்.

Tags :
|