Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தைவான் முன்னாள் அதிபர் சீனாவுக்கு பயணம் செல்ல திட்டம்

தைவான் முன்னாள் அதிபர் சீனாவுக்கு பயணம் செல்ல திட்டம்

By: Nagaraj Mon, 20 Mar 2023 8:35:18 PM

தைவான் முன்னாள் அதிபர் சீனாவுக்கு பயணம் செல்ல திட்டம்

தைபே: தைவான் முன்னாள் அதிபர் மா யிங்-ஜீயவ். அவர் அடுத்த வாரம் சீனா செல்ல திட்டமிட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து அவரது அறக்கட்டளை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி. அவருடன் தைவான் மாணவர் குழுவும் பயணிக்கிறது. அவர்கள் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சீன மாணவர்களைச் சந்தித்து உரையாடப் போகிறார்கள் என்று அறிக்கை கூறுகிறது.

தைவானின் கோமிண்டாங் எதிர்க்கட்சியின் முக்கிய நபரான மா யிங்-ஜீயவ், ஏப்ரல் 27 முதல் ஏப்ரல் 7 வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார். சீனாவுக்கும் தைவானுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்திருக்கும் நேரத்தில் அவரது இந்த பயணம் அமைகின்றது. சீன உள்நாட்டுப் போர் 1949 இல் முடிவுக்கு வந்தது.

china,former president,ma ying-jeou,taiwan,tour, ,சீனா, சுற்றுப்பயணம், தைவான், மா யிங்-ஜீயவ், முன்னாள் அதிபர்

அதன்பின்னர் அந்நாட்டுக்கு வருகை தந்த முதல் தைவான் தலைவர் மா யிங்-ஜீயவ் ஆவார். இதனால், அவரது பயணம் வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது. அவரது இந்த பயணம் தனிப்பட்ட முறையிலானது என கூறப்படுகிறது. மா யிங்-ஜீயவ் தனது முன்னோர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக சீனாவின் தென்மேற்கு ஹுனான் மாகாணத்திற்குச் செல்வதாகக் கூறப்படுகிறது.

தைவான் ஒரு ஜனநாயக சுயாட்சி அமைப்பால் ஆளப்படுகிறது. இருப்பினும், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி தனது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என தொடர்ந்து கூறிவருவதுடன், தைவானை தன்னுடன் இணைக்க வற்புறுத்த முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதை சீனா மறுக்கவில்லை. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதன் காரணமாக தைவான் ஜலசந்தி பகுதியில் போர் மூளும் பதற்றமான சூழ்நிலையும் காணப்பட்டது.

Tags :
|
|
|