Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு

நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு

By: Nagaraj Wed, 02 Aug 2023 11:58:45 PM

நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் மீது மீண்டும் குற்றச்சாட்டுகள் பதிவு

அமெரிக்கா: நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் பதிவு... 2020 ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முற்பட்டார் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிரம்ப் அமெரிக்காவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோபைடனின் வெற்றியை காங்கிரஸ் சான்றளிப்பதை தடுக்க முயன்றார் என 45 பக்க குற்றச்சாட்டுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும், இதன் மூலம் அமெரிக்காவை ஏமாற்றி அமெரிக்க மக்களின் நியாயமான தேர்தலுக்கான உரிமையை பறிக்க முயன்றார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக டொனால்ட் டிரம்பினை வியாழக்கிழமை நியுயோர்க்கில் உள்ள சமஸ்டி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

featured,compensation,court,judgment,sex,accusation ,இடம்பெற்றது, இழப்பீடு, நீதிமன்றம், தீர்ப்பு, பாலியல், குற்றச்சாட்டு

அண்மையில் டொனால்ட் ட்ரம்ப் பாலியல் துஸ்பிரயோக வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு குற்றவாளி என நீதிமன்றம் உறுதிபடுத்தியிருந்தது. இந்நிலையிலேயே அவர் மீண்டும் குற்றவாளியாக நீதிமன்றுக்கு அழைக்கபட்டுள்ளார்.

மேலும், 1996ஆம் ஆண்டு இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஈ ஜெலான் கெரோல் என்பவரால் வழக்குதாக்கல் செய்யப்பட்டது. இதனடிப்படையிலேயே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இழப்பீடாக பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 3 மில்லியன் டொலர் அளிக்கவும் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|