Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதை தொடர்ந்து சட்டப்படி கைதானார்

நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதை தொடர்ந்து சட்டப்படி கைதானார்

By: Nagaraj Wed, 05 Apr 2023 09:15:20 AM

நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானதை தொடர்ந்து சட்டப்படி கைதானார்

வாஷிங்டன்: நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானார். அங்கு அவர் சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவர் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் அளித்து வீடியோ ஆதாரத்தை வெளியிட்டுள்ளனர். இதற்கிடையில், ஆபாச நடிகை ஒருவர் டிரம்ப்புடனான தனது உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் எழுதியிருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ட்ரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலின் போது இந்தக் குற்றச்சாட்டு வெளிப்பட்டது.

தேர்தல்களில் அதன் தாக்கம் அதிகமாக எதிரொலித்தது. அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில் ஆபாச நடிகையுடனான விவகாரம் வைரலானதால், டிரம்புக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதையடுத்து, ஸ்டோர்மி டேனியல்ஸை பேசவிடாமல் தடுக்க டிரம்ப் 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்களை வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

court,donald-trump,former president,new york,united states, ,அமெரிக்கா, கோர்ட், டொனால்டு டிரம்ப், நியூயார்க், முன்னாள் அதிபர்

ட்ரம்பின் பிரச்சாரக் கணக்குகளில் இந்தத் தொகை சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புகார் கூறுகிறது. கிரிமினல் வழக்கில் டொனால்ட் டிரம்ப் மீதான ஆவணங்கள் உறுதி செய்யப்பட்டதாகவும், விரைவில் அவர் கைது செய்யப்படுவார் என்றும் வெளியான செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அவர் விரைவில் சரண் அடையப் போவதாக தகவல் வெளியானது. டொனால்ட் டிரம்ப் மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் (டிஏ) அலுவலகத்தில் சரணடைவார் என்று அவரது வழக்கறிஞர் ஜோ டகோபினா தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னாள் அதிபர் டிரம்ப் ஆஜரானார். அங்கு அவர் சட்டப்படி கைது செய்யப்பட்டார். அவர் கைரேகை பதிவு செய்யப்பட்டது. ஆனால் விலங்கு மாட்டப்படவில்லை. டொனால்டு டிரம்ப் கோர்ட்டில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
|