Advertisement

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் காலமானார்

By: Nagaraj Mon, 21 Sept 2020 9:52:20 PM

கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் காலமானார்

முன்னாள் பிரதமர் காலமானார்... 1980 களில் 11 வாரங்கள் மட்டுமே பதவியில் இருந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜோன் டர்னர் தனது 91 வயதில் காலமானார்.

நாட்டின் 17 வது பிரதமராக பணியாற்றிய டர்னர், 1984 இல் லிபரல் கட்சி அரசாங்கத்தின் தலைமையில் குறுகிய காலம் இருந்தபோதிலும், கனேடிய கூட்டாட்சி அரசியலில் பல தசாப்தங்கள் கடமையாற்றினார்.

கடந்த 21 ஆண்டுகளில் 20 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த லிபரல் கட்சிக்கு வாக்காளர் சோர்வு அதிகரித்த நேரத்தில், 1984 ஜூன் மாத பிற்பகுதியில், தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் தந்தை – பியர் எலியட் ட்ரூடோவிடம் இருந்து டர்னர் ஆட்சியைப் பொறுப்பேற்றார்.

liberal,victorious,short-lived,former prime minister,passed away ,லிபரல், வெற்றி, குறுகிய காலம், முன்னாள் பிரதமர், காலமானார்

அந்த நேரத்தில், அவர் ஏற்கனவே நிதி மற்றும் நீதி அமைச்சர் பதவிகளை வகித்திருந்தார். ஆனால் பிரதமராக அவரது 79 நாள் பதவிக்காலமே கனேடிய வரலாற்றில் இரண்டாவது குறுகிய காலம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னர் 1990 ல் லிபரல் தலைவர் பதவியை டர்னர் ராஜினாமா செய்தமையை அடுத்து அவருக்கு பதிலாக ஜீன் கிரெட்டியன் தலைவராக நியமிக்கப்பட்டார், அவர் 1993 ல் கட்சியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :