Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை

By: Nagaraj Fri, 16 June 2023 7:32:34 PM

பாலியல் தொல்லை வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபிக்கு 3 ஆண்டுகள் சிறை

விழுப்புரம்: 3 ஆண்டுகள் சிறை தண்டனை... பெண் எஸ்.பிக்குப் பாலியல் தொல்லை அளித்த வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

2021ஆம் ஆண்டு ராஜேஷ் தாஸ் மீதும் அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாக அப்போதைய செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் மீதும் புகார் அளிக்கப்பட்டது.

விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கின் விசாரணை கடந்த 12ஆம் தேதி நிறைவடைந்தது.

3 years imprisonment,judge,time,granted,bail,order ,3 ஆண்டுகள் சிறை, நீதிபதி, அவகாசம், வழங்கினார், ஜாமீன், உத்தரவு

இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி புஷ்பராணி, ராஜேஷ்தாசுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் 20 ஆயிரத்து 500 ரூபாய் அபராதமும் விதித்தார்.

முன்னாள் எஸ்.பி கண்ணனுக்கு 500 ரூபாய் அபராதம் மட்டும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை செலுத்திய ராஜேஷ்தாஸ், ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். அதனை ஏற்ற நீதிபதி, அவருக்கு 30 நாட்கள் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.

இந்த 30 நாட்களுக்குள் விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய நீதிபதி அவகாசம் வழங்கினார்.

Tags :
|
|
|