Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழக மாஜி எம்எல்ஏவின் மகன் வெற்றி

இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழக மாஜி எம்எல்ஏவின் மகன் வெற்றி

By: Nagaraj Mon, 08 May 2023 7:40:55 PM

இங்கிலாந்து உள்ளாட்சி தேர்தலில் தமிழக மாஜி எம்எல்ஏவின் மகன் வெற்றி

இங்கிலாந்து: தமிழர் வெற்றி... இங்கிலாந்தில் கடந்த 4ம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சி சார்பில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெற்றியழகன் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றார்.

திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பா சுப்பிரமணியன். எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது குத்தாலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். இவரது மூத்த மகன் வெற்றியழகன்.

councilor,mp,selection, ,இங்கிலாந்து, கவுன்சிலர், தேர்வு, முன்னாள் எம்எல்ஏவின் மகன்

பொறியியல் பட்டதாரியான இவர் லண்டனில் பணிபுரிந்து கடந்த 15 ஆண்டுகளாக குடும்பத்துடன் அங்கேயே வசித்து வருகிறார். ஆங்கிலேய குடியுரிமை பெற்ற வெற்றியழகன், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ளார்.

இந்நிலையில், மகனின் வெற்றி குறித்து தந்தை பாப்பா சுப்பிரமணியன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Tags :
|