Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • துருக்கியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

துருக்கியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

By: Karunakaran Sat, 04 July 2020 10:29:30 AM

துருக்கியில் பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து - 4 பேர் உயிரிழப்பு

துருக்கி நாட்டின் சஹர்யா மாகாணத்தில் உள்ள ஹெண்டிக் நகரில் பட்டாசுத்தொழிற்சாலை உள்ளது. நேற்று வழக்கம் போல் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த பட்டாசுத்தொழிற்சாலையில் 180-க்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

நேற்று 180-க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்த போது, திடீரென பட்டாசுத்தொழிற்சாலையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதனால், தொழிற்சாலையில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் பயங்கர சத்தத்துடன் வெடித்தன. இதனால் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் அலறிக்கொண்டு ஓடினர்.

turkey,fireworks factory,blast,4 dead ,துருக்கி, பட்டாசு தொழிற்சாலை, வெடி விபத்து, 4 மரணம்

இருப்பினும் சில தொழிலாளர்கள் தப்பிக்க முடியாமல் தொழிற்சாலையிலேயே சிக்கிக்கொண்டனர். அதன்பின் தகவலறிந்த சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் விரைந்து சென்றனர். அதன்பின், தொழிற்சாலைக்குள் சிக்கிய நபர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த விபத்து காரணமாக வேலை செய்துகொண்டிருந்த 4 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்தனர். மேலும், 97 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags :
|
|