Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உலகின் மகிழ்ச்சியான இடங்களில் பிரான்ஸ் இடம் பிடிக்கவில்லையாம்

உலகின் மகிழ்ச்சியான இடங்களில் பிரான்ஸ் இடம் பிடிக்கவில்லையாம்

By: Nagaraj Tue, 21 Mar 2023 10:33:35 PM

உலகின் மகிழ்ச்சியான இடங்களில் பிரான்ஸ் இடம் பிடிக்கவில்லையாம்

பிரான்ஸ்: இடம் பிடிக்கவில்லை... உலகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் முதல் 20 இடங்களில் கூட பிரான்ஸ் இடம்பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இதே பட்டியலில் 20வது இடத்தில் இருந்த பிரான்ஸ் இந்தமுறை, 21வது இடத்தில் உள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும், உலக நாடுகளில் உள்ள மக்களிடம் முன்னெடுக்கப்பட்ட ஆய்வுகளின் முடிவிலேயே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பிரான்ஸ் பெற்ற புள்ளிகள் 6.661 என தெரியவந்துள்ளது. அதேவேளை டென்மார்க் நாடு 7.586 புள்ளிக்கள் பெற்றுள்ள நிலையில், இத்தாலி 6.405 புள்ளிகளை பெற்றுள்ளது.

front row,france,britain,canada,happy country ,முன்வரிசை, பிரான்ஸ், பிரிட்டன், கனடா, மகிழ்ச்சியான நாடு

மிகவும் மகிழ்ச்சியான நாடுகள் வரிசையில் முதல் 10 இடங்களில் பின்லாந்து, டென்மார்க், ஐஸ்லாந்து, சுவீடன் மற்றும் நார்வே நாடுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், பிரான்ஸை விடவும் அமெரிக்கா, பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் முன்வரிசையில் உள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர், 2013ல் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பிரான்ஸ் 25வது இடத்தில் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|