Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ்

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ்

By: Nagaraj Fri, 12 Aug 2022 9:59:53 PM

தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத்தீயால் பாதிப்பை சந்தித்துள்ள பிரான்ஸ்

பிரான்ஸ்: தீயணைப்பு வீரர்கள் போராடுகின்றனர்... தென்மேற்கு ஐரோப்பாவில் தொடர்ந்து எரிந்து வரும் காட்டுத் தீ ஏற்படுத்தி வரும் சேதங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. வெப்பம் குறைவதற்கான அறிகுறியே தென்படாத நிலையில், காட்டுத் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

இதில், பிரான்ஸ் குறிப்பாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பிரான்சில் உள்ள ஜிரோண்டே பகுதியில் தீயினால் 6,200 ஹெக்டேர் பரப்பளவில் உள்ள காடுகள் எரிந்துள்ளன. இந்த ஆண்டு பிரான்சில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஒட்டுமொத்தமாக 57,200 ஹெக்டேர் பரப்பளவில் தீப்பிடித்துள்ளது. 10,000 குடியிருப்பாளர்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது

தென்மேற்கு பிரான்சின் கிரினோட் பகுதியில் புதன்கிழமை காட்டுத்தீ பரவியது, பல வீடுகளை அழித்தது. 10,000க்கும் அதிகமான குடியிருப்பாளர்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. சுமார் 6,200 ஹெக்டேர்களை (15,320) அழித்த தீ, இப்போது அண்டை நாடான லாண்டேஸ் பகுதிக்கும் தீ பரவிவிட்டது.

காட்டுத்தீயின் கோரத்தில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள்ல் வீடுகளை காலி செய்து செல்லும்போது, ஆவணங்கள், செல்லப்பிராணிகள், சில உடமைகளை எடுத்துச் செல்லுமாறு உள்ளூர் நிர்வாகம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

forests,trees,france,firemen,people,nature ,
வனப்பகுதிகள், மரங்கள், பிரான்ஸ், தீயணைப்பு வீரர்கள், மக்கள், இயல்பு வாழ்க்கை

தீ மேலும் பரவிக் கொண்டிருப்பதால், தீ பரவும் இடங்களில் உள்ள குடியிருப்பாளர்களை வெளியேறுமாறு காவல்துறை வீடு வீடாகச் சென்று அறிவிப்பு வெளியிட்டு வருகிறது.

காட்டுத்தீயின் பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு விமானம் மரங்கள் மீது தீ தடுப்பு மருந்தை தெளிக்கிறது. ஐரோப்பாவின் மற்ற பகுதிகளைப் போலவே பிரான்சும் இந்த கோடையில் தொடர்ச்சியான வெப்ப அலைகள் மற்றும் அதன் மோசமான வறட்சியுடன் போராடி வருகிறது.

குறைந்தது எட்டு பெரிய காட்டுத்தீகள் உட்பட நாடு முழுவதும் டஜன் கணக்கான காட்டுத்தீகள் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. லோசெர் மற்றும் அவேரோன் போன்ற பகுதிகளிலும் தீ பரவியது. மேற்கு பிரான்சில் உள்ள மைனே எட் லோரி என்ற பகுதியில் 1,200 ஹெக்டேர்களுக்கு மேல் உள்ள வனப்பகுதியில் உள்ள மரங்கள் அனைத்தும் தீயினால் கருகிவிட்டன.

Tags :
|
|
|