Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பிரான்ஸ் பதிலடி கொடுக்காது

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பிரான்ஸ் பதிலடி கொடுக்காது

By: Nagaraj Fri, 14 Oct 2022 09:25:04 AM

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பிரான்ஸ் பதிலடி கொடுக்காது

பிரான்ஸ்: அதிர்ச்சி கொடுத்தது பிரான்ஸ்... உலகக் போரை விரும்பாததால் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்தினால் பிரான்ஸ் பதிலடி கொடுக்காது என ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

முதல் முறையாக உக்ரைன் தொடர்பிலான பிரான்சின் அணுசக்தி தடுப்புக் கோட்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மேக்ரான் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் போரை நிறுத்த வேண்டும் எனக் கூறினார்.

மேலும் பேசிய மேக்ரான், கடந்த சில நாட்களாக ரஷ்யர்களின் நோக்கம் உக்ரேனிய தடையை உடைப்பதே ஆகும். முதன் முறையாக உக்ரைன் முழுவதும் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பிறகு, உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளை பிரான்ஸ் வழங்கும். மேலும், இந்த தாக்குதல்களில் இருந்து அவர்களைப் பாதுகாக்க ரேடார்கள், அமைப்புகள் மற்றும் ஏவுகணைகளை நாங்கள் வழங்கப் போகிறோம்.

nuclear weapons,ukraine,france,will not retaliate ,அணு ஆயுதங்கள், உக்ரைன், பிரான்ஸ், பதிலடி கொடுக்காது

அதே சமயம், எங்கள் கோட்பாடு தேசத்தின் அடிப்படை நலன்களில் தங்கியுள்ளது. உக்ரேனியர்கள் கேட்கும் அளவுக்கு பிரான்சால் வழங்க முடியவில்லை. எனினும், கூடுதல் சீசர் துப்பாக்கிகள் டென்மார்க்கிற்காக தயாரிக்கப்பட்டாலும், உக்ரைனுக்கு அவற்றை வழங்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

அத்துடன், உக்ரைனில் அமைதி குறித்து விவாதிக்க புடின் மேசைக்கு திரும்ப வேண்டும். உக்ரைனின் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மதிப்பளிக்க வேண்டும்.

ரஷ்யா அணு ஆயுதங்களை உக்ரைனுக்கு எதிராக பயன்படுத்தினால் பிரான்ஸ் அதற்கு பதிலடி கொடுக்காது என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|