Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பிரான்சின் புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்; அதிபர் இமானுவேல் அறிவிப்பு

பிரான்சின் புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்; அதிபர் இமானுவேல் அறிவிப்பு

By: Nagaraj Sat, 04 July 2020 08:33:13 AM

பிரான்சின் புதிய பிரதமர் ஜீன் காஸ்டெக்ஸ்; அதிபர் இமானுவேல் அறிவிப்பு

புதிய பிரதமர் பற்றிய அறிவிப்பு... பிரான்சின் புதிய பிரதமராக, ஜீன் காஸ்டெக்ஸ் பொறுப்பேற்பார் என, அதிபர், இமானுவேல் மேக்ரோன் அறிவித்தார்.

ஐரோப்பிய நாடான பிரான்சின் பிரதமராக பதவி வகித்த, எட்வர்டு பிலிப் (49) கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைகளில், சரியாக செயல்படவில்லை என்ற கருத்து நிலவுகிறது. மார்ச், ஏப்., மாதங்களில் அந்நாட்டு மக்களுக்கு முக கவசம் மற் றும் மருத்துவ உபகரணங்களில் பற்றாக்குறை ஏற்பட்டதுடன், பரிசோதனைகளும் முறையாக நடைபெறவில்லை என்ற புகாரும் எழுந்தது.

இதன் எதிரொலியாக 28ம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில், அதிபர் இமானுவேல் மேக்ரோன் தலைமையிலான அரசு, நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதனால், பிரதமர், எட்வர்டு பிலிப் நேற்று முன்தினம் தன் பதவியை ராஜினாமா செய்தார்.

new prime minister,president,announcement,jean costeux ,புதிய பிரதமர், அதிபர், அறிவிப்பு, ஜீன் காஸ்டெக்ஸ்

இதையடுத்து கொரோனா பிரச்னையில், தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்ட ஜீன் காஸ்டெக்ஸ் (55) புதிய பிரதமராக பொறுப்பேற்பார் என, இமானுவேல் மேக்ரோன் நேற்று அறிவித்தார். இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது:

எங்கள் ஆட்சியில், மீதமுள்ள இரண்டு ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரத்தை புதிய வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கடந்த மூன்றாண்டுகளாக, எட்வர்டு பிலிப் மேற்கொண்ட நடவடிக்கைகளை, நான் பாராட்டுகிறேன். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

Tags :