Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கனடாவில் வீடுகள் வாடகைக்கு விடுவதில் மோசடி... போலீசார் எச்சரிக்கை

கனடாவில் வீடுகள் வாடகைக்கு விடுவதில் மோசடி... போலீசார் எச்சரிக்கை

By: Nagaraj Thu, 03 Nov 2022 11:16:46 AM

கனடாவில் வீடுகள் வாடகைக்கு விடுவதில் மோசடி... போலீசார் எச்சரிக்கை

கனடா: எச்சரிக்கை விடுத்த போலீசார்... கனடாவில் வீடுகள் வாடகைக்கு விடுவது குறித்து மோசடிகள் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


குறிப்பாக ரொறன்ரோ பெரும்பாக பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்று வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்கள் முகநூல் உள்ளிட்ட சமூக ஊடக வலைத் தளங்களின் ஊடாக இந்த மோசடியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

rental houses,warning,legality,agents,money ,வாடகை வீடுகள், எச்சரிக்கை, சட்டபூர்வம், முகவர்கள், பணம்

இணைய வழியில் வீடுகள் வாடகைக்கு விடப்படுவது தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென தெரிவிக்கப்படுகின்றது. போலீசார் இது தொடர்பில எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

வாடகைக்கு விடப்படும் வீடுகளை நேரில் பார்க்காது கொடுப்பனவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாடகை குறித்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட முன்னதாக பணம் வைப்பிலிட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சரியான சட்டபூர்வமான முகவர்களிடமிருந்து மட்டும் வாடகைக்கு வீடுகளை பெற்றுக்கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags :
|