Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • புலம்பெயர்தல் பெயரில் மோசடி; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

புலம்பெயர்தல் பெயரில் மோசடி; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

By: Nagaraj Tue, 25 Aug 2020 10:53:27 AM

புலம்பெயர்தல் பெயரில் மோசடி; எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்

வெளிநாட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தல்... புலம்பெயர்தல் பெயரில் சில அமைப்புகள் மோசடியில் ஈடுபடுவதால் வெளிநாட்டவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்கள்.

புலம்பெயர விருப்பம் காட்டுவோரை கனடாவில் வேலை வாய்ப்பு இருப்பதாக கூறி சில அமைப்புகள் மோசடியில் ஈடுபடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, வேலை தேடுவோர், வேலை வாய்ப்பு அளிப்பதாக கூறும் நிறுவனங்களின் பின்புலத்தை கவனமாக விசாரித்து செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

பணிக்கமர்த்தும் நிறுவனங்கள் என தங்களை அழைத்துக்கொள்ளும் சில அமைப்புகள், புலம்பெயர்தல் ஆலோசனை மையங்கள், வேலை கொடுப்பதாக கூறுவோர் என ஒரு சிக்கலான கூட்டமைப்பு இந்த மோசடியில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

alert,immigration,job opportunity,foreigners ,எச்சரிக்கை, புலம்பெயர்தல், பணி வாய்ப்பு, வெளிநாட்டவர்கள்

இந்த மோசடியில் சிக்கியோர், தங்களை முதலில் கனடாவில் வேலை வாங்கித் தருவோர் என கூறிக்கொள்பவர்கள் தொடர்பு கொண்டதாகவும், குறிப்பாக கட்டுமானப் பணியில் வேலை வாய்ப்பு இருப்பதாகவும், உண்மையான ஒரு நிறுவனம் நடத்தும் நேர்காணல் போலவே நடத்தி தங்களை கையாண்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த முதல் கட்ட நேர்காணல் முதாலானவை முடிந்ததும், புலம்பெயர்தல் ஆலோசகர் ஒருவரை தொடர்புகொள்ள அறிவுறுத்தப்பட்டதாகவும், கூடுதலாக சில ஆவணங்களை நிரப்பும்படி கோரப்பட்டதாகவும், அதற்குப் பின் பணம் அனுப்பும்படி கோரப்பட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

எப்படியாவது கனடாவுக்குச் சென்று வேலை ஒன்றில் சேரவேண்டும் என்ற ஆசையில் இருக்கும் புலம்பெயர்வோர் பலர், இந்த வலையில் சிக்கிக்கொள்வதாகவும் தெரியவந்துள்ளது.

Tags :
|