Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • முதல் நாளில் அமோக வரவேற்பு பெற்ற இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்..

முதல் நாளில் அமோக வரவேற்பு பெற்ற இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்..

By: Monisha Sat, 16 July 2022 6:18:40 PM

முதல் நாளில் அமோக வரவேற்பு பெற்ற இலவச பூஸ்டர் தடுப்பூசி திட்டம்..

தமிழ்நாடு: நாட்டின் 75 ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மத்திய அரசு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோவிட் பூஸ்டர் தடுப்பூசி 75 நாள்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என அறிவித்துள்ளது.இந்த இலவச தடுப்பூசி திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் முதல் நாளிலேயே அமோக வரவேற்பு பெற்றுள்ளதாக மத்திய சுகதாராத்துறை புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. நேற்று மட்டும் ஒரே நாளில் 18 முதல் 59 வயதுக்குப்பட்டோரில் 13.2 லட்சம் பேர் பூஸ்டர் தடுப்பூசியை இலவசமாக செலுத்தியுள்ளனர். இது இத்தனை நாள் சாராசரியை விட 16 மடங்கு அதிகம்.

நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான பூஸ்டர் தடுப்பூசி திட்டம் ஏப்ரல் 10ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தில் ஜூலை 14ஆம் தேதிவரை சுமார் 78 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பயனடைந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 81 ஆயிரம் பேர் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திய நிலையில், நேற்று ஒரே நாளில் இது 16 மடங்கு அதிகரித்து 13.2 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர்.

booster,vaccination,free,programme ,இலவசம், பூஸ்டர் ,தடுப்பூசி, திட்டம்,

நாட்டில் சுமார் 77.10 கோடி பேர் 18-59 வயதில் உள்ளனர். இந்த மக்கள்தொகையில் இதுவரை ஒரு சதவீதத்திற்கு குறைவானோரே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளனர்.பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை பொறுத்த வரை பீகார், ஹரியானா மாநிலங்கள் அதிக பேருக்கு செலுத்தியுள்ளன. இந்த மாநிலங்கள் மத்திய அரசுக்கு முன்னதாகவே பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை இலவசமாக்கின. பீகாரில் 30 லட்சம் பேர் பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர். அதேவேளை தலைநகர் டெல்லியில் மூன்று மடங்கு குறைவாக 10 லட்சம் பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தியுள்ளனர்.

நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கோவிட் தொற்று தினசரி பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. குறிப்பாக, மகாராஷ்டிரா,கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக வயது வந்தோருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை அரசு துரிதப்படுத்தியுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்தி வரும் இந்தியாவில் இதுவரை 199.71 கோடி கோவிட் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன.

Tags :
|