Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அனைவருக்கும் இலவசம்; அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி

அனைவருக்கும் இலவசம்; அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி

By: Nagaraj Thu, 17 Sept 2020 10:05:39 AM

அனைவருக்கும் இலவசம்; அதிபர் டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி

அனைவருக்கும் இலவசம்... அமெரிக்கர்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும் என்று டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் சுகாதாரத்துறையும், பாதுகாப்புத் துறையும் இணைந்து வெளியிட்ட இரண்டு ஆவணங்களில் கொரோனா தடுப்பு மருந்து விநியோகத்திற்கான திட்டம் வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு மருந்துக்கு பணம் செலவழிக்க வேண்டிய அவசியமில்லை என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

corona,vaccine,free,usa,people ,கொரோனா, தடுப்பு மருந்து, இலவசம், அமெரிக்கா, மக்கள்

மருந்து தயாரானதும் அமெரிக்க மக்களுக்கு மிக விரைவில் எந்தவித தாமதமும் இன்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மருந்து தயாரிப்பு அதிக அளவில் இல்லாத நிலை இருக்கலாம் என்பதால் சுகாதாரத்துறையினர் போன்ற முதன்மையான பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் வரும் நிலையில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அதிபர் டிரம்ப். இது சரிந்து போன அவரது செல்வாக்கை உயர்த்தும் திட்டம் என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|