Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம்; முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம்; முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!

By: Monisha Mon, 27 July 2020 10:33:14 AM

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசம்; முதல்வர் இன்று தொடங்கி வைத்தார்!

ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் கட்டிடத்தில் கடந்த ஜூன் மாதம் 2-ந்தேதி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் துணியால் தயாரிக்கப்பட்ட மறுபயன்பாட்டுடன் கூடிய தலா 2 முககவசங்கள் வழங்க பரிசீலிக்கப்படுவதாக அவர் கூறினார்.

tamil nadu,ration card,free mask,cm edappadi palanisamy ,தமிழ்நாடு,ரேசன் அட்டை,இலவச முககவசம்,முதல்வர் எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் 2 கோடியே 8 லட்சத்து 23 ஆயிரத்து 76 ரேஷன் அட்டைதாரர்கள் உள்ளனர். அதில் உள்ள குடும்ப அங்கத்தினர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது, 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பேர் வருகின்றனர். இதில், ஒவ்வொருவருக்கும் தலா 2 முககவசங்கள் என்று கணக்கிட்டால், மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 முகக்கவசங்கள் வழங்கப்படவேண்டும்.

இந்நிலையில், ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச முககவசங்கள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை தலைமைச்செயலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

இதன் மூலம், முதற்கட்டமாக பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் வசிக்கும் 69 லட்சத்து 9 ஆயிரம் குடும்பங்களுக்கு 4 கோடியே 44 லட்சம் முகக்கவசங்கள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட இருக்கிறது.

Tags :