Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இலவச நீட் தேர்வு பயிற்சி வருகிற 26ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

இலவச நீட் தேர்வு பயிற்சி வருகிற 26ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

By: vaithegi Mon, 21 Nov 2022 6:59:12 PM

இலவச நீட் தேர்வு பயிற்சி வருகிற 26ம் தேதி முதல் வகுப்புகள் தொடக்கம்

சென்னை: : இலவச நீட் தேர்வு பயிற்சி .... இந்தியாவில் மருத்துவ படிப்புகளில் சேர நீட் எனும் நுழைவுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.

ஏனெனில் கடந்த வருடங்களில் தமிழகத்தில் இருந்து மருத்துவர் ஆக வேண்டும் என்ற கனவோடு நீட் தேர்வெழுதிய மாணவர்கள் தோல்வியுற்று மன உளைச்சலுக்கு ஆளாகி உயிரிழந்தனர். இது போன்ற நிகழ்வுகளை தடுக்கவே நீட் தேர்வில் விலக்கு வேண்டும் அரசு போராடி கொண்டு வருகிறது.

neet exam practice.classes ,நீட் தேர்வு பயிற்சி.வகுப்புகள்

தற்போது வசதி படைத்த மாணவர்கள் நீட் தேர்வில் பயிற்சி பெற கட்டணம் செலுத்தி பயிற்சி வகுப்புகளுக்கு சென்று தங்களை தயார்படுத்தி கொண்டு வருகின்றனர். ஆனால் ஏழை குழந்தைகள் பொருளாதார நெருக்கடியால் பயிற்சி வகுப்புகளுக்கு செல்ல முடியாத சூழல் உருவாகியுள்ளது.

இதையடுத்து இந்நிலையில் பள்ளிகல்வித்துறை அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயிற்சி வழங்க முடிவு செய்தது. எனவே அதன்படி வரும் 26ம் தேதி நடப்பு ஆண்டுக்கான நீட் தேர்வு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படவுள்ளது. தமிழகம் முழுவதும் 412 மையங்களில் இப்பயிற்சி வகுப்பு நடைபெறவுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

Tags :