Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் இன்று முதல் இலவச துவரம் பருப்பு

ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் இன்று முதல் இலவச துவரம் பருப்பு

By: Nagaraj Mon, 11 May 2020 12:52:23 PM

ரேஷன் கார்டுகளுக்கு புதுச்சேரியில் இன்று முதல் இலவச துவரம் பருப்பு

இன்று முதல் இலவச துவரம் பருப்பு... சிகப்பு ரேஷன் கார்டுகளுக்கான இலவச துவரம் பருப்பு இன்று முதல் வழங்கப்படும் என குடிமை பொருள் வழங்கல் துறை இயக்குனர் வல்லவன் தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளி ஒருவருக்கு மூன்று மாதத்திற்கு நபர் ஒருவருக்கு 15 கிலோ அரிசியும், ரேஷன் கார்டு ஒன்றுக்கு 3 கிலோ பருப்பும் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.

duvaruppu,puducherry,beneficiaries,free ,துவரம் பருப்பு, புதுச்சேரி, பயனாளிகள், இலவசம்

இத்திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாநிலத்திற்கு 534 டன் துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி முதல் பயனாளிகளுக்கு துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்று முதல் அனைத்து சட்டசபை தொகுதிகளிலும் ரேஷன் கடைகளுக்குட்பட்ட பயனாளிகளுக்கு அருகில் உள்ள பள்ளிகள், சமுதாய நலக்கூடத்தில் ரேஷன்கார்டு ஒன்றுக்கு 3 கிலோ கிலோ பருப்பு வழங்கப்படும்.

இத்திட்டத்தில் புதுச்சேரியில் 95 சதவீத பயனாளிகளுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. விடுப்பட்ட பயனாளிகளுக்கு துறை மூலமாக ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள், துவரம் பருப்புடன் அரிசியையும் வாங்கிக் கொள்ளலாம். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags :