Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்திரபிரதேசம் ... பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் வரை மட்டுமே கிடைக்கும்

உத்திரபிரதேசம் ... பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் வரை மட்டுமே கிடைக்கும்

By: vaithegi Sun, 28 Aug 2022 11:06:50 AM

உத்திரபிரதேசம்  ...  பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் வரை மட்டுமே கிடைக்கும்

உத்திரபிரதேசம் : இந்தியாவில் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு மலிவு விலையில் உணவு பொருட்கள் ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. எனவே இதன் மூலம் கோடிக்கணக்கான ஏழை மக்கள் பயன்பெற்று கொண்டு வருகின்றன. இதை தவிர மாநில அரசு மற்றும் மத்திய அரசுகள் மூலம் வழங்கப்படும் அனைத்து சலுகைகளும் இந்த ரேஷன் கடைகள் மூலம் மக்கள் பெற்று வருகின்றன.

நாடு முழுவதும் செயல்பட்டு வரும் ரேஷன் கடைகளில் ஊழல்கள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதை தடுக்கும் விதமாக ரேஷன் கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று கொண்டு வருகிறது.

free rice,uttar pradesh , இலவச அரிசி ,உத்திரபிரதேசம்  ,


இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியை சந்தித்தது. இந்நிலையில் மத்திய அரசு பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு யூனிட்டுக்கு 5 கிலோ கோதுமை, அரிசி கூடுதலாக வழங்கப்பட்டது.

தற்போது உத்திரபிரதேச மாநில அரசு செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் கார்டுதாரர்களுக்கு இலவச ரேஷன் விநியோகம் நிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.

எனவே இதன்படி, பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் இலவச அரிசி செப்டம்பர் மாதம் வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதவாது செப்டம்பர் மாதத்திற்கு பிறகு கோதுமை கிலோ ஒன்றுக்கு 2 ரூபாய்க்கும், அரிசிக்கு 3 ரூபாய்க்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :