Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்திரபிரதேசத்தில் குறிப்பிட்ட சில குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் இலவச சர்க்கரை

உத்திரபிரதேசத்தில் குறிப்பிட்ட சில குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் இலவச சர்க்கரை

By: vaithegi Sat, 16 Sept 2023 3:22:27 PM

உத்திரபிரதேசத்தில் குறிப்பிட்ட சில குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் இலவச சர்க்கரை

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச கோதுமை மற்றும் அரிசி வழங்கப்பட்டு கொண்டு வருகிறது. இந்த நிலையில், பொதுமக்களுக்கு கூடுதலாக இலவச சர்க்கரை வழங்குவதாக மாநில அரசு அறிவித்து உள்ளது.

ஆனால், குறிப்பிட்ட சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே இந்த இலவச சர்க்கரை வழங்கப்படும் என்றும், இந்த மாதத்திற்கான இலவச ரேஷன் விநியோகம் துவங்கப்பட்டுள்ளதாகவும் மாநில அரசு அறிவித்து உள்ளது.

sugar,family cardholder,uttar pradesh ,சர்க்கரை , குடும்ப அட்டைதாரர்,உத்திரபிரதேசம்

மேலும் இது மட்டுமல்லாமல், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ஒரு கிலோ சர்க்கரை ரூ.18க்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போன்று, அந்த்யோதயா அட்டைதாரர்களுக்கு 21 கிலோ அரிசி, 14 கிலோ கோதுமை இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதே போன்று, சாதாரண வீட்டு அட்டைதாரர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 5 கிலோ இலவசமாக வழங்கப்படும். மேலும், அந்த்யோதயா அட்டை வைத்திருப்பவர்களுக்கு இந்த மாதம் மூன்று மாத சர்க்கரை வழங்கப்பட இருப்பதாகவும், வருகிற செப்.23 ஆம் தேதிக்குள் பெற்றுக்கொள்ளும்படியும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|