Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • உத்திரபிரதேசத்தில் இந்த தேதி வரை ரேஷன் கடைகளில் இலவச பொருள் விநியோகம்

உத்திரபிரதேசத்தில் இந்த தேதி வரை ரேஷன் கடைகளில் இலவச பொருள் விநியோகம்

By: vaithegi Sun, 15 Oct 2023 3:16:31 PM

உத்திரபிரதேசத்தில் இந்த தேதி வரை ரேஷன் கடைகளில்  இலவச பொருள் விநியோகம்

உத்திரபிரதேசம் : உத்திரபிரதேச மாநில அரசு வருகிற அக். 25 ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் கோதுமை இலவசமாக வாங்கி கொள்ளலாம் ...இந்தியாவில் இந்த மாதம் வரிசையாக பண்டிகை நாட்கள் வர இருக்கிறது.

அதனால் பல்வேறு மாநில அரசுகள் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பண்டிகை கால பரிசுகளை வழங்கி கொண்டு வருகிறது. அந்த வரிசையில் உத்திரபிரதேசம் மாநில அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வழங்கி கொண்டு வருகிறது. அதாவது கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் வருகிற அக்டோபர் 25ஆம் தேதி வரை அரிசி மற்றும் கோதுமை வாங்கிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.

ration shop,uttar pradesh,rice,wheat ,ரேஷன் கடை,உத்திரபிரதேசம், அரிசி ,கோதுமை


இதையடுத்து இந்த திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு உதவுவதை நோக்கமாக கொண்டுள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துக்கான இலவச விநியோகம் கடந்த அக்டோபர் 12ஆம் தேதி முதல் தொடங்கி இருக்கிறது.

இந்நிலையில் வருகிற அக். 25 ஆம் தேதி வரை பொதுமக்கள் இதனை வாங்கி கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு கார்டுக்கு மொத்தம் 35 கிலோ உணவு வழங்கப்படும். அதாவது, 14 கிலோ கோதுமை மற்றும் 21 கிலோ அரசி வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags :
|