Advertisement

தெற்கு சூடானில் சரக்கு விமானம் விபத்து; 17 பேர் பலி

By: Nagaraj Sun, 23 Aug 2020 3:14:32 PM

தெற்கு சூடானில் சரக்கு விமானம் விபத்து; 17 பேர் பலி

தெற்கு சூடானில் ஜூபா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே சரக்கு விமானம் ஒன்று திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்ததில் சுமார் 17 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த சம்பவத்தில் இருந்து உயிர் தப்பிய பயணி ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அப்பர் நைல் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ஜோசப் மயோம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது: "விபத்தை நான் பார்த்தவரை, ஒருவர் வலியால் கத்திய சத்தம் கேட்ட பின்னர் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

15 பயணிகள், 2 பணியாளர்கள் உள்பட 17 உடல்களை மீட்டுள்ளோம்" என்று மயோம் கூறினார். சவுத் வெஸ்ட் ஏவியேஷனைச் சேர்ந்த சரக்கு விமானம் ஜூபாவின் ஹாய் குடியிருப்பு பகுதியில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது என்றும், விமானத்தின் சிதறிய பாகங்கள் இன்னும் எரிந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்திய ஜூபா சர்வதேச விமான நிலைய இயக்குநர் குர் குவோல், பலியானோர் குறித்து எதுவும் கூறவில்லை.

cargo plane,17 killed,food items,crash ,சரக்கு விமானம், 17 பேர் பலி, உணவு பொருட்கள், விபத்து

மேலும் விபத்து குறித்த கூடுதல் விவரங்கள் எதுவும் தெரியவில்லை, விமான விபத்து உயிரிழப்பு குறித்து உள்ளூர் தகவல்கள் தெரிவித்துள்ளன, ஆனால் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை தற்போது தெளிவாக தெரியவில்லை.

ஆனால் விபத்துக்குள்ளான விமானம் நிறுவனம் ஒன்றுக்கு மோட்டார் சைக்கிள்கள், உதிரி பாகங்கள், உணவுப் பொருள்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் சம்பளங்களை ஏற்றிச் செல்லும் ஒரு சரக்கு விமானம் என்றும், அதில் அதிகமான பயணிகள் இல்லை என்று குவோல் கூறினார்.

விமானம் விபத்தில் சிக்கி தீப்பிடித்து எரிந்து வரும் நிலையிலும், சுற்றியிருந்தவர்களில் சிலர் விமானத்தில் இருந்து சிதறிய பணத்தை எடுப்பதில் ஆர்வம் காட்டியுள்ளனர்.

Tags :