Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடிக்கடி அறிகுறிகள், வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

அடிக்கடி அறிகுறிகள், வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

By: Monisha Fri, 08 July 2022 6:35:04 PM

அடிக்கடி அறிகுறிகள், வீட்டிலேயே ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் கொரோனாவை டெஸ்ட் செய்யலாமா?

தமிழ்நாடு: ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட் கிட்டுகள் மருந்துக் கடைகளிலும் ஆன்லைனிலும் கிடைக்கின்றன.இப்போது உள்ளதுபோல கொரோனா தொற்றின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில் ரேபிட் ஆன்டிஜென் கிட் வாங்கி, வீட்டிலேயே பரிசோதித்துக்கொள்ளலாம், தவறில்லை என்று சென்னையைச் சேர்ந்த தொற்றுநோய் சிகிச்சை சிறப்பு மருத்துவர் அப்துல் கஃபூர் கூறிகிறார்.

அந்த கிட்டில் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்ற குறிப்புகள் இருக்கும். அவற்றை முறையாகப் பின்பற்றி டெஸ்ட் செய்யலாம்.

ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் டெஸ்ட் செய்து ஒருவேளை உங்களுக்கு பாசிட்டிவ் என்று வந்தால், மீண்டும் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்த வேண்டிய தேவையில்லை.

corono,antigen kit,test,symptoms ,ரேபிட் ,பாசிட்டிவ்,கொரோனா,
 ஆன்டிஜென் டெஸ்ட்,

ரேபிட் ஆன்டிஜென் டெஸ்ட்டில் பாசிட்டிவ் என்றால் நிச்சயம் உங்களுக்கு பாசிட்டிவ்வாகத்தான் இருக்கும்.அதே நேரம் ரேபிட் ஆன்டிஜென்ட் டெஸ்ட்டில் நெகட்டிவ் என்று வந்து, இன்னொரு பக்கம் உங்களுக்கு கொரோனா தொடர்பான அறிகுறிகள் இருப்பதாக சந்தேகப்பட்டால், அப்போது நீங்கள் ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து அதை உறுதிப்படுத்தலாம்.

ஆர்டிபிசிஆர் டெஸ்ட் செய்து, அதன் ரிசல்ட் தெரிய சில மணி நேரம் காத்திருக்க வேண்டும். ரேபிட் ஆன்டிஜென் கிட்டில் அதிகபட்சமாக அரை மணி நேரத்துக்குள் ரிசல்ட்டை தெரிந்துகொள்ளலாம்.

Tags :
|
|