Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசம்

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசம்

By: vaithegi Mon, 06 Nov 2023 10:21:22 AM

தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு தொடர்ந்து 5-வது நாளாக மிகவும் மோசம்

புது டெல்லி: இன்று (நவம்பர் 6) காலை நிலவரப்படி டெல்லியில் காற்றின் தரக் குறையீடு (Air Quality Index – AQI) 488 ஆக உள்ளது. சஃபார் (SAFAR - System of Air Quality and Weather Forecasting And Research) கணிப்பின்படி கடந்த 4-ம் தேதி மாலை 4 மணிக்கு 415 ஆக இருந்த நிலையில், நேற்று (5-ம் தேதி) காலை 7 மணிக்கு 460 ஆகமோசமடைந்தது. இந்த நிலையில் இன்று காலை இது 488 ஆக மிகவும் மோசமடைந்து உ ள்ளது.

இதனால் டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு உள்ளாக்கியுள்ளனர். இயல்பு வாழ்க்கையே பாதிக்கப்படும் அளவுக்கு டெல்லியில் அன்றாடம் காற்று மாசு மக்களை மூச்சுத் திணற வைக்கிறது. இதன் இடையில் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் இன்று சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளை ஆலோசனைக்கு அழைத்து உள்ளார்.

air pollution,capital delhi , காற்று மாசு,தலைநகர் டெல்லி


இந்த நிலையில் காற்று மாசை எதிர்கொள்ள டெல்லியில் கிராப்-4 (GRAP-4) கிரேடட் ரெஸ்பான்ஸ் ஆக்‌ஷன் ப்ளான் (Graded Response Action Plan) அமலுக்கு வந்துள்ளது.கிராப்-4 அமலாகியுள்ளதால் டெல்லிக்குள் நுழைய சமையல் எரிவாயு சிலிண்டர் உள்பட மிகமிக அத்தியாவசியமான பொருட்களைக் கொண்டு வரும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

இதையடுத்து மற்றபடி மிதமான லகு ரக வாகனங்கள் தொடங்கி கன ரக வாகன்ங்கள் வரை அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளுக்கும் கெடுபிடி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், காற்று மாசு அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், தொடக்கப் பள்ளிகளை வருகிற நவ.10-ம் தேதி வரை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. காற்று மாசின் நச்சுக்களில் இருந்து குழந்தைகளைக் காக்கும்வகையில் கிராப்-4ன் கீழ் பள்ளிகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags :