Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கடந்த டிச 24 முதல் ஜன 3ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா

கடந்த டிச 24 முதல் ஜன 3ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா

By: vaithegi Thu, 05 Jan 2023 6:22:44 PM

கடந்த டிச 24 முதல் ஜன 3ம் தேதி வரை வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா

இந்தியா: வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா ... கொரோனா வைரஸ் தொற்று தானாக உருமாற்றம் அடைந்து பல்வேறு புதிய வகை வைரசை உருவாக்கி கொண்டு வருகிறது. இந்த உருமாற்றம் அடைந்த தொற்றுகள் மூலம் மிகவும் அதிக அளவிலான பாதிப்புகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இதையடுத்து இந்த நிலையில், தற்போது சீனா, ஜப்பான், தாய்லாந்து, அமெரிக்கா, தென் கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் புதிய வகை வைரஸ்கள் மூலமாக மிகவும் தீவிரமான நிலை நிலவி கொண்டு வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் தொற்று பாதிப்புக்கு உள்ளாகிறார்கள்.

corona,india ,கொரோனா,இந்தியா

இந்நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு பயணிக்கும் மக்கள் மூலமாக தொற்று பரவி விடக் கூடாது என மத்திய அரசு, குறிப்பிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு வருவோர் கொரோனா நெகட்டிவ் சான்றிதழை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும், கொரோனா சோதனை அவசியம் செய்து கொள்ள வேண்டும் என்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடைபிடித்து கொண்டு வருகிறது.

ஆனால், கடந்த டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி 3ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 40 பேருக்கு புதிய வகை வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தற்போது தகவல் வெளியிட்டுள்ளது.

Tags :
|