Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இந்த தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் ..வானிலை ஆய்வு மையம் தகவல்

இந்த தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் ..வானிலை ஆய்வு மையம் தகவல்

By: vaithegi Sat, 23 Sept 2023 10:23:43 AM

இந்த தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும்  ..வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: வருகிற 25ம் தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேற வாய்ப்பு தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

meteorological centre,monsoon ,வானிலை ஆய்வு மையம்,பருவமழை


நாளை முதல் 28ஆம் தேதி வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

இந்த நிலையில் இந்தியாவிலிருந்து வருகிற 25ம் தேதி முதல் தென் மேற்கு பருவமழை வெளியேற தொடங்கும் . வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 3வது வாரத்திற்கு பிறகு தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளார்.

Tags :