Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் கிராமப்புறங்களில் கோயில், தேவாயலம், மசூதிகளில் வழிபட அனுமதி

இன்று முதல் கிராமப்புறங்களில் கோயில், தேவாயலம், மசூதிகளில் வழிபட அனுமதி

By: Nagaraj Mon, 06 July 2020 2:19:45 PM

இன்று முதல் கிராமப்புறங்களில் கோயில், தேவாயலம், மசூதிகளில் வழிபட அனுமதி

கிராமப்புறங்களில் இன்று முதல் வழிபாட்டு தலங்கள் முழுமையாக திறக்கப்படுகின்றன. பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கிராமப்புறங்களில் இன்று முதல் அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சென்னை உட்பட 4 மாவட்டங்கள் மற்றும் மதுரை மாவட்டங்களில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரமாக அமுல்படுத்தபட்டது. இந்த கட்டுப்பாடுகள் சில இன்று முதல் தளர்த்தப்படுகின்றன.

authorities,information,rural,liturgical,commerce ,அதிகாரிகள், தகவல், கிராமப்புறம், வழிப்பாட்டு தலங்கள், வர்த்தகம்

இதேபோல் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலும் இன்று முதல் பல்வேறு தளர்வுகள் அமலுக்கு வருகின்றன. கிராமப்புறங்களில் உள்ள சிறிய கோவில்கள் (ஆண்டு வருவாய் ரூ10,000க்கும் குறைவானவை), மசூதிகள், தேவாலயங்களில் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். ஆனால் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வழிபாட்டு தலங்களில் பொது தரிசன அனுமதி இல்லை

வழிபாட்டுத் தலங்களில் சமூக இடைவெளி, நோய் தடுப்பு நடவடிக்கைகள் அவசியம். தொழில், ஏற்றுமதி நிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் 100 சதவீத தொழிலாளர்களுடன் இயங்கலாம்.
ஷாப்பிங் மால்கள் தவிர மற்ற அனைத்து வர்த்தக நிறுவனங்களும் 50 சதவீத பணியாளர்களுடன் செயல்படலாம். அனைத்து கடைகளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணிவரை இயங்கலாம்
ஹோட்டல்களில் சமூக இடைவெளியுடன் அமர்ந்து சாப்பிடலாம்
இந்த தளர்வுகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|