Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இன்று முதல் 26.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

இன்று முதல் 26.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

By: vaithegi Wed, 24 May 2023 3:32:59 PM

இன்று முதல் 26.05.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

சென்னை: வெப்ப சலனம் காரணமாக, இன்று முதல் வருகிற 26.05.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து வருகிற 27.05.2023 மற்றும் 28.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என அறிவித்துள்ளது.

மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவித்துள்ளது.

rainy,tamil nadu,puducherry,karaikal ,மழை ,தமிழ்நாடு, புதுச்சேரி ,காரைக்கால்

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): மடத்துக்குளம் (திருப்பூர்), கெலவரப்பள்ளி அணை (கிருஷ்ணகிரி), நம்பியூர் (ஈரோடு) தலா 3, ஓசூர் (கிருஷ்ணகிரி), வால்பாறை PAP (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்). திருமூர்த்தி அணை (திருப்பூர்), சின்கோனா (கோயம்புத்தூர்),

இதனை அடுத்து சின்னகல்லாறு (கோயம்புத்தூர்), பார்வூட் (நீலகிரி), உதகை (நீலகிரி) தலா 2, சோத்துப்பாறை (தேனி), தாளவாடி (ஈரோடு), பெரியகுளம் AWS (தேனி), பெரியார் (தேனி), பெரியகுளம் (தேனி), உடுமலைப்பேட்டை (திருப்பூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி). மேட்டுப்பாளையம் (கோயம்புத்தூர்), ஆனைமடுவு அணை (சேலம்) தலா 1.

Tags :
|