Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • எப்டிஎக்ஸ் நிறுவனர் சாம் பேங்க்மேன் மீது குற்றச்சாட்டு... முதலீட்டாளர்களை ஏமாற்றினாராம்

எப்டிஎக்ஸ் நிறுவனர் சாம் பேங்க்மேன் மீது குற்றச்சாட்டு... முதலீட்டாளர்களை ஏமாற்றினாராம்

By: Nagaraj Wed, 14 Dec 2022 11:05:59 AM

எப்டிஎக்ஸ் நிறுவனர் சாம் பேங்க்மேன் மீது குற்றச்சாட்டு... முதலீட்டாளர்களை ஏமாற்றினாராம்

பஹாமாஸ்: FTX நிறுவனர் சாம் பேங்க்மேன் ஃபிரைட் முதலீட்டாளர்களை ஏமாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

30 வயதான பேங்க்மேன் ஃபிரைட், கிரிப்டோ கரன்சி எக்ஸ்சேஞ்ச் சரிவுக்குப் பிறகு நேற்று பலத்த பாதுகாப்புடன் பஹாமாஸ் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது அவர் அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதை எதிர்த்துப் போராடப் போவதாக தெரிவித்தார்.

america,crypto,hedge,finance,scam,deposit ,அமெரிக்கா, கிரிப்டோ, ஹெட்ஜ், நிதி, ஏமாற்றும் திட்டம், டெபாசிட்

குற்றப்பத்திரிகையில், சாம் பாங்க்மேன் FTX வாடிக்கையாளர்களின் டெபாசிட்களை தவறாகப் பயன்படுத்தி, செலவுகள் மற்றும் கடன்களைச் செலுத்த பயன்படுத்தி உள்ளார்.

அவரது கிரிப்டோ ஹெட்ஜ் நிதியான அலமேடா ரிசர்ச் எல்.எல்.சி.யின் சார்பாக முதலீடுகளைச் செய்யவும் வாடிக்கையாளர்களை ஏமாற்றும் திட்டத்தில் ஈடுபட்டதாக அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|
|