Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • டொரன்டோ, தென் ஒன்றாரியோ பகுதிகளில் எரி பொருட்கள் விலை குறையும்

டொரன்டோ, தென் ஒன்றாரியோ பகுதிகளில் எரி பொருட்கள் விலை குறையும்

By: Nagaraj Wed, 07 Dec 2022 11:16:04 PM

டொரன்டோ, தென் ஒன்றாரியோ பகுதிகளில் எரி பொருட்கள் விலை குறையும்

கனடா: டொரன்டோ பெரும்பாக பகுதி மற்றும் தென் ஒன்றாரியோ ஆகிய பகுதிகளில் எரி பொருட்களின் விலைகள் வீழ்ச்சி அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

குறிப்பாக பெட்ரோலின் விலை வீழ்ச்சி அடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலின் விலை லிட்டர் ஒன்றுக்கு மூன்று சதங்களினால் வீழ்ச்சி அடையும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இதன்படி நாளைய தினம் ஒரு லிட்டர் பெட்ரோல் 140.9 சதம் என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியானது இந்த ஆண்டில் பதிவாகும் மிகக் குறைந்த பெட்ரோல் விலை என்பது குறிப்பிடத்தக்கது.

fuels,tax relief,provincial government,sustained. petrol ,எரிபொருட்கள், வரி தளர்வு, மாகாண அரசாங்கம், நீடித்துள்ளது. பெட்ரோல்

கடந்த அக்டோபர் மாதம் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 180.9 சதங்களாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அன்மைய மாதங்களில் பெட்ரோலின் விலை தொடர்ச்சியாக ஒன்றாரியோ மாகாணத்தில் வீழ்ச்சி அடைந்து வருகின்றது.

எரிபொருட்களுக்கு விதிக்கப்படும் வரி தளர்வு நடவடிக்கைகளை மாகாண அரசாங்கம் மேலும் ஓர் ஆண்டிற்கு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|