Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • பாகிஸ்தானில் முழு அடைப்பில் தளர்வுகள்; பிரதமர் இம்ரான்கான் தகவல்

பாகிஸ்தானில் முழு அடைப்பில் தளர்வுகள்; பிரதமர் இம்ரான்கான் தகவல்

By: Nagaraj Sun, 17 May 2020 6:48:38 PM

பாகிஸ்தானில் முழு அடைப்பில் தளர்வுகள்; பிரதமர் இம்ரான்கான் தகவல்

கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ பழகி கொள்ளுங்கள்... பாகிஸ்தானில் பிறப்பிக்கப்பட்டுள்ள முழு அடைப்பால், 15 கோடி மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் தொற்றுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்' என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கேட்டுக் கொண்டுள்ளார்.

பாகிஸ்தானில், கடந்த, 24 மணி நேரத்தில், 1,581 பேருக்கு, கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 38 ஆயிரத்து, 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 834 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்நிலையில், பிரதமர் இம்ரான் கான், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவைப் போல, பாக்.,கில் நீண்ட நாட்களுக்கு முழு அடைப்பை தொடர முடியாது. இங்கு, தினக்கூலியை நம்பி, 2.50 கோடி மக்கள் வாழ்கின்றனர். அவர்களின் வாழ்வாதாரம், ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளது.மேலும், 15 கோடி ஏழை, எளிய மக்கள், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

corona,relaxation,curfew,prime minister imran,people ,கொரோனா, தளர்வுகள், ஊரடங்கு, பிரதமர் இம்ரான், மக்கள்

எனவே, இனியும் முழு அடைப்பை தொடர்வது, நிலைமையை மேலும் மோசமாக்கும். கொரோனா வைரசுக்கு, தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் வரை, அது, நம்மைவிட்டு போக போவதில்லை. ஆனால், தனிமனித இடைவெளி உள்ளிட்ட சில கடுமையான விதிமுறைகளை, தவறாமல் கடைப்பிடிப்பதன் மூலம், தொற்றில் இருந்து, நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். பாதிப்பு எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

அதை சமாளிக்க, சுகாதார வசதிகளையும், அரசு மேம்படுத்தி வருகிறது. வைரசுடன் வாழ, மக்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும். ஏழைகளின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, முழு அடைப்பில், தளர்வுகள் அறிவிக்க, அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

இதற்கிடையே, உள்ளூர் விமான போக்கு வரத்து குறைந்த அளவில் துவக்கப்பட்டுள்ளது. இது படிப்படியாக அதிகரிக்கப்படும் என, பாக்., அரசு அறிவித்துள்ளது.

Tags :
|
|