Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • கொரோனா பரவல் அதிகரிப்பால் முழு ஊரடங்கு , கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை குறித்து சுகாதாரத்துறை தகவல்

கொரோனா பரவல் அதிகரிப்பால் முழு ஊரடங்கு , கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை குறித்து சுகாதாரத்துறை தகவல்

By: vaithegi Fri, 17 June 2022 6:51:51 PM

கொரோனா பரவல் அதிகரிப்பால்  முழு ஊரடங்கு , கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை அமல்படுத்துவதை  குறித்து சுகாதாரத்துறை தகவல்

இந்தியா: இந்தியாவில் மஹாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா 4ம் அலைத்தொற்று சற்று வீசத்துவங்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை இப்போழுது நூற்றுக்கும் மேல் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

இந்த திடீர் பாதிப்புகள் பொது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை உண்டு பண்ணி இருக்கும் வேளையில் தமிழகம் முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுமா அல்லது நோய்த்தடுப்பு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.

இது தவிர பொது மக்கள் அனைவரும் மீண்டும் முகக்கவசங்களை அணிய வேண்டும் என்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அரசின் சார்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழகத்தின் தற்போதைய நிலைமை மற்றும் நோய்தடுப்பு கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘தமிழகத்தில் எத்தனை பேருக்கு மேல் கொரோனா பரிசோதனை செய்கிறோமோ அதில் 10%க்கும் மேல் பாசிட்டிவிட்டி பதிவாகி வந்தாலும், அல்லது ஒரு இடத்தில் 40%க்கும் மேல் நோய்த்தொற்று பாதிப்புகள் கண்டறியப்பட்டால் அந்த இடங்களில் கொரோனா தடுப்பு கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் வழிகாட்டுதல்களின் கீழ் இருக்கும் ஒரு பகுதியாகும்

corona,general public,mask ,கொரோனா ,பொது மக்கள் ,முகக்கவசம்

தமிழகத்தை பொறுத்தமட்டில் இப்படிப்பட்ட சூழ்நிலைகள் எதுவும் இதுவரை ஏற்படவில்லை. அதாவது, பரிசோதனை செய்பவர்களில் 3 அல்லது 4 பேர் மட்டுமே கொரோனாவுக்கு எதிராக பாசிட்டிவ் விகிதத்தை பதிவு செய்கின்றனர். அதிலும் மருத்துவமனையில் சேர்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை என்பது சுத்தமாக இல்லை.

இப்போது பாதிக்கப்பட்டுள்ள 781 பேரில் வெறும் 11 பேர் மட்டுமே அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்றவர்கள் அவரவர் வீட்டுகளில் தனிமைப்படுத்தலில் உள்ளனர். அதனால், தமிழகத்தில் கொரோனா தொற்று பாசிட்டிவ் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் பட்சத்தில் மட்டும் தான் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்’ என்று விளக்கம் அளித்துள்ளார்..

Tags :
|