Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியில் முழு ஊரடங்கு

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஹரியானா மாநிலம் பல்லப்கர் பகுதியில் முழு ஊரடங்கு

By: vaithegi Fri, 17 June 2022 7:31:11 PM

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக ஹரியானா மாநிலம்  பல்லப்கர் பகுதியில் முழு ஊரடங்கு

ஹரியானா :மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான வன்முறை மற்றும் போராட்டங்களைத் தொடர்ந்து ஹரியானா மாநில அரசு முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்த வகையில், ஹரியானா மாநிலத்தின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் பல்லப்கர் பகுதியில் நடைபெற்ற வன்முறையை தடுக்கும் விதமாக விதிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 24 மணிநேரம் மொபைல் இன்டர்நெட் மற்றும் எஸ்எம்எஸ் என அனைத்து சேவைகளை அரசு நிறுத்தி வைத்துள்ளது. அதே நேரத்தில் குருகிராமில் பெரிய கூட்டங்களை நடத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.

அந்த வகையில் ‘குருகிராமில் நான்கு நபர்களுக்கு மேல் கூடுவதைக் கட்டுப்படுத்த 144 CrPCன் கீழ் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அந்நகர டிஎம் கூறியுள்ளார்.

மேலும் போராட்டம் தொடர்பாக மாநில உள்துறையின் கூற்றுப்படி, ‘போராட்டக்காரர்களால் பல்லாப்கர் சப்-டிவிஷனில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறையில் மனித உயிர் மற்றும் உடைமைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. மேலும் பொது அமைதிக்கும் இடையூறு ஏற்பட வாய்ப்புள்ளது என தகவல் வந்துள்ளது.

full curfew,violence,144 ban , முழு ஊரடங்கு,வன்முறை ,144தடை

எனவே, பல்வேறு சமூக ஊடக தளங்கள் மூலம் தவறான தகவல் மற்றும் வதந்திகள் பரவுவதைத் தடுக்க பல்லப்கரின் அதிகார வரம்பில் வரும் பகுதிகளில் மொபைல், இணையம் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை நிறுத்தி வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டங்கள் மற்றும் வன்முறைகள் வெடித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் காரணமாக சட்டம், ஒழுங்கு மீறப்படுவதை தடுக்கும் வகையில் டெல்லி மெட்ரோ, ஐடிஓ, டெல்லி கேட் மற்றும் ஜமா மஸ்ஜித் மெட்ரோ நிலையங்கள் ஆகிய அனைத்தும் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

Tags :