Advertisement

பரேலியில் ஜூலை 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்

By: vaithegi Mon, 27 June 2022 9:53:38 PM

பரேலியில்  ஜூலை 3 வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்

பரேலி: கடந்த ஜூன் மாதம் 10ம் தேதி அறிவிக்கப்பட்ட முஸ்லிம் மதகுரு தௌகிர் ராசா போராட்டத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரேலியில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் வரை நீட்டிக்கப்படுவதாக தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, கடந்த மாதம் உத்திர பிரதேச மாநிலம் கான்பூரில் ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து பரேலி நிர்வாகம் 144வது பிரிவின் கீழ் ஊரடங்கு சட்டத்தை விதித்துள்ளது.

இது குறித்த நிர்வாகத்தின் உத்தரவின் படி, ஐந்து நபர்களுக்கு மேல் பொது இடத்தில் கூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஊரடங்கு காலகட்டத்தில் போராட்டங்களும் தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கான்பூர் வன்முறையை கருத்தில் கொண்டு ஜூலை 3ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கு கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கான்பூரில் உள்ள யதீம் கானா மற்றும் பரேட் கிராஸ்ரோட்ஸ் பகுதிகளில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டது.

full curfew,bareilly ,முழு ஊரடங்கு, பரேலி

இதற்கிடையில், இந்த மாத துவக்கத்தில் நடைபெற்ற கான்பூர் வன்முறை வழக்கில் முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாநில காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. மேலும் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் மக்கள் பொது இடங்களில் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதற்காக மட்டும் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :