Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு; வாகன போக்குவரத்தின்றி நெடுஞ்சாலைகள் வெறிச்சோடியது

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு; வாகன போக்குவரத்தின்றி நெடுஞ்சாலைகள் வெறிச்சோடியது

By: Nagaraj Sat, 20 June 2020 11:24:03 AM

நான்கு மாவட்டங்களில் முழு ஊரடங்கு; வாகன போக்குவரத்தின்றி நெடுஞ்சாலைகள் வெறிச்சோடியது

அரசின் கடுமையான ஊரடங்கு நடைமுறையால், நான்கு மாவட்டங்களில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகள், வாகன நடமாட்டம் இன்றி வெறிச்சோடின.

சென்னை - திண்டுக்கல், சென்னை - பெங்களூரு, சென்னை - திருப்பதி, சென்னை - கோல்கட்டா, சென்னை பைபாஸ் தேசிய நெடுஞ்சாலைகள், கிழக்கு கடற்கரை சாலை போன்றவை, போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்தவை. நாள்தோறும் இந்த சாலைகள் வழியாக, லட்சணக்கணக்கான வாகனங்கள், சென்னைக்கு வந்து செல்வது வழக்கம்.

police corruption,full curfew,chennai,deserted ,போலீஸ் கெடுபிடி, முழு ஊரடங்கு, சென்னை, வெறிச்சோடியது

முழு ஊரடங்கு நேற்று நடைமுறைக்கு வந்ததால், சென்னையில் தனியாக இருந்த பலரும், சொந்த ஊர்களுக்கு, நேற்று முன்தினம் சென்று விட்டனர். தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை கடந்து, லட்சக்கணக்கான வாகனங்கள், நான்கு மாவட்டங்களை விட்டு வெளியேறி விட்டன. இதனால், சுங்கச் சாவடிகளில் விடிய விடிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்நிலையில், நேற்று ஊரடங்கை நான்கு மாவட்ட போலீசாரும் கடும் கெடுபிடியுடன் அமல்படுத்த துவங்கினர்.

பல்வேறு முக்கிய சாலைகளில், வாகன நடமாட்டத்தை தடுக்கும் வகையில், தடுப்பு வேலிகள் வைக்கப்பட்டன. உரிய அனுமதியின்றி வந்த வாகனங்கள், திருப்பி அனுப்பப்பட்டன. இரு சக்கர வாகனங்கள், கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீஸ் கெடுபிடி காரணமாக, நான்கு மாவட்ட எல்லைகளில் உள்ள, தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் வெறிச்சோடி கிடந்தன. சரக்கு வாகனங்கள் மட்டுமே, உரிய அனுமதியுடன் சென்னைக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டது.

Tags :