Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

By: Nagaraj Tue, 01 Dec 2020 6:52:49 PM

அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி

மனுக்கள் தள்ளுபடி... கொரோனா தொற்றால் உயிரிழக்கும் சடலங்களை தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் உயர் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே வெளியான வர்த்தமானி அறிவிப்பை சவால் செய்து வலுக்கட்டாயமாக தகனம் செய்யும் இந்த நடவடிக்கைக்கு இடைக்கால தடை உத்தரவை பிறப்புக்க கோரி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தவர்களின் சடலங்களை தகனம் செய்வது தொடர்பில் வௌியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்யுமாறு கோரி 11 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

corona,petitions,rebates,infringement ,கொரோனா, மனுக்கள், தள்ளுபடி, உரிமை மீறல்

இலங்கையில் கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 257 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அதன்படி நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 817 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்று உறுதியாகியோரின் மொத்த எண்ணிக்கை 23 ஆயிரத்து 987 ஆக காணப்படுகின்றது.

இதில் 6 ஆயிரத்து 52 பேர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்றுவரும் அதேவேளை 545 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர். மேலும் இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags :
|