Advertisement

ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு

By: vaithegi Sat, 14 Jan 2023 3:09:07 PM

ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை மேலும் நீட்டிப்பு

ஹரியானா: நாட்டில் பனிக்காலம் தொடங்கியதால் பல நகரங்களில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது. இதில் குறிப்பாக ஜம்மு மற்றும் காஷ்மீர், உத்தரபிரதேசம், டெல்லி, ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட பகுதிகளில் பனிப்பொழிவு அதிகமாக காணப்படுகிறது.

எனவே அதன் காரணமாக மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.அந்த வகையில் ஹரியானா மாநிலத்தில் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி 15-ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது.

holidays,haryana,schools ,விடுமுறை ,ஹரியானா, பள்ளிகள்

இதையடுத்து இந்நிலையில், இந்திய வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, ஹரியானா மாநிலம் உட்பட வட இந்திய மாநிலங்களில் வரும் வாரங்களில் அதிகமான பனிப்பொழிவு நிலவும் என அறிவித்துள்ளது.அதனால் தற்போது மாணவர்களின் நலன் கருதி ஹரியானா பள்ளிகளுக்கான விடுமுறையை நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே அதன்படி பள்ளிகளுக்கு விடுமுறை வருகிற 21-ம் தேதி வரை விடுமுறை அளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அத்துடன் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வுகள் வழக்கம் போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags :