Advertisement

ஸ்ரீநகரில் ஜி20 பணிக்குழு கூட்டம் இன்று தொடக்கம்

By: Nagaraj Mon, 22 May 2023 6:03:56 PM

ஸ்ரீநகரில் ஜி20 பணிக்குழு கூட்டம் இன்று தொடக்கம்

ஜம்மு: ஜி20 பணிக்குழு கூட்டம்... ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில், ஜி20 பணிக் குழு கூட்டம் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் பங்கேற்கும் நிலையில், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் தடுப்பதற்காக ஸ்ரீநகரில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காஷ்மீா் பள்ளத்தாக்கு முழுவதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் வளா்ந்த, வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி20 கூட்டமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா வகித்து வருகிறது. இதையொட்டி, பல்வேறு துறை சாா்ந்த ஜி20 சா்வதேச கூட்டங்கள், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வருகின்றன.

commandos,patrol,surveillance,mountain,army,navy ,கமாண்டோக்கள், ரோந்துப்பணி, கண்காணிப்பு, மலைப்பகுதி, ராணுவம், கடற்படை

சுற்றுலா தொடா்பான ஜி20 பணிக்குழுவின் மூன்றாவது கூட்டம், ஸ்ரீநகரில் உள்ள ஷோ்-இ-காஷ்மீா் சா்வதேச மாநாட்டு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கி 3 நாள்கள் நடைபெறவுள்ளது.

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு நடைபெறும் முதல் சா்வதேச கூட்டம் இதுவாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள், 20 பத்திரிகையாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்கும் இக்கூட்டத்தை, மத்திய சுற்றுலாத் துறை அமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி, பிரதமா் அலுவலக இணையமைச்சா் ஜிதேந்திர சிங், ஜம்மு-காஷ்மீா் துணை நிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா ஆகியோா் முறைப்படி தொடங்கிவைக்கவுள்ளனா்.

இதையொட்டி, ஸ்ரீநகரில் காவல்துறை, ராணுவம், மத்திய ரிசா்வ் போலீஸ் படை, தேசிய பாதுகாப்புப் படை, கடற்படை கமாண்டோக்கள் என பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜபா்வன் மலைப்பகுதி முதல் எழில்மிக்க தால் ஏரி வரை கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தால் ஏரியில் கடற்படை கமாண்டோக்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

Tags :
|
|