Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க நிலைப்பாட்டை வலியுறுத்தி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க நிலைப்பாட்டை வலியுறுத்தி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

By: Nagaraj Thu, 09 Nov 2023 6:35:55 PM

இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்க நிலைப்பாட்டை வலியுறுத்தி ஜி7 நாடுகள் கூட்டறிக்கை

அமெரிக்கா: ஜி 7 நாடுகள் கூட்டறிக்கை... இஸ்ரேல்-காசா போர் உக்கிரமடைந்து வரும் சூழலில் போர் நிறுத்தத்தை வலியுறுத்தாமல் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் முந்தைய நிலைப்பாட்டையே வலியுறுத்தி ஜி 7 நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன.

முதலில் சிறு சிறு இடைவெளியில் சண்டை நிறுத்தம் பின்னர் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான முயற்சி என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

china support,should not,canada,france,g7 countries,war,israel ,சீனா ஆதரவு, கூடாது, கனடா, பிரான்ஸ், ஜி.7 நாடுகள், போர், இஸ்ரேல்

டோக்கியோவில் நடைபெற்ற ஜி 7 நாடுகளின் கூட்டத்தில் மனிதாபிமான அடிப்படையிலான சண்டை நிறுத்தம் மற்றும் நிவாரணப் பொருட்களுக்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு சீனா ஆதரவளிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டது.

கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் மற்றும் ஐரோப்பிய யூனியன் பிரதிநிதி ஆகியோர் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டனர்.

Tags :
|
|
|