Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • காந்தி ஜெயந்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை

காந்தி ஜெயந்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை

By: vaithegi Mon, 02 Oct 2023 3:45:25 PM

காந்தி ஜெயந்தி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை

சென்னை: ஆளுநர், முதல்வர் ஸ்டாலின் மரியாதை ..நாடு முழுவதும் உத்தமர் காந்தியடிகளின் 155-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழக அரசின் சார்பில், சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்து உள்ள காந்தி சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

இதைத்தொடர்ந்து தமிழக அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, ராஜ கண்ணப்பன், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

courtesy,governor of tamil nadu rn ravi,chief minister m. k. stalin ,மரியாதை ,தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின்

மேலும், மகாத்மா காந்தியின் புகழைப் போற்றும் வகையில், அமைந்த பஜனைப் பாடல்களுடன் கூடிய இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடும் செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியை தமிழக ஆளுநரும், முதல்வரும் அமர்ந்து கேட்டனர்.

காந்தி ஜெயந்தியையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு இடங்களில், அவரது சிலைக்கும், உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. மேலும், காந்தி ஜெயந்தி நாளான அக்டோபர் 2ம் தேதியான இன்று, கிராம சபைக் கூட்டங்களும் நடைபெற்று வருகிறது.

Tags :