Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி விழா... பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

விநாயகர் சதுர்த்தி விழா... பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

By: Nagaraj Mon, 18 Sept 2023 07:08:03 AM

விநாயகர் சதுர்த்தி விழா... பூக்களின் விலை கிடுகிடு உயர்வு

கன்னியாகுமரி: பூக்கள் விலை உச்சம்... கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தோவாளை பூச்சந்தையில் ஆவணி கடைசி முகூர்த்த நாள் மற்றும் விநாயகர் சதுர்த்தி காரணமாக பூக்கள் விலை மூன்று மடங்கு உயர்ந்து விற்பனை ஆனது.

கிலோ 700 ரூபாயாக இருந்த குண்டு மல்லிகைப் பூ விலை ஆயிரத்து 500 ரூபாய்குக்கும் கிலோ 300 ரூபாயாக இருந்த பிச்சிப்பூ விலை ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

traders,sales,flower prices,promotion,ganesha chaturthi ,வியாபாரிகள், விற்பனை, பூக்கள் விலை, உயர்வு, விநாயகர் சதுர்த்தி

தூத்துக்குடியில் தென்மேற்கு பருவமழை போதிய அளவு இல்லாததால், வாழை விவசாயம் பாதிக்கப்பட்டதாகவும், அதனால் வாழை இலை மற்றும் வாழைத்தார் விலை அதிகரித்துள்ளதாகவும் வியாபாரிகள் கூறினர்.

தோவாளைக்கு நேர்மாறாக, தருமபுரியில் பூக்கள் விலை குறைந்ததிருந்ததால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாமந்தி பூ கிலோ 20 ரூபாய்க்கும் சம்பங்கி பூ கிலோ 140 ரூபாய்க்கும் பன்னீர் ரோஸ் 120 ரூபாய்க்கும் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags :
|