Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... ஜெயிலர், புஷ்பா விநாயகர் சிலைகள் விற்பனை

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... ஜெயிலர், புஷ்பா விநாயகர் சிலைகள் விற்பனை

By: Nagaraj Wed, 31 Aug 2022 08:39:07 AM

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல்... ஜெயிலர், புஷ்பா விநாயகர் சிலைகள் விற்பனை

சென்னை: விநாயகர் சிலைகளில் ஸ்பெஷல்... புஷ்பக விநாயகர் பற்றி கேள்விப்பட்டிருப்போம், ஆனால் புஷ்பா விநாயகர் பற்றி உங்களுக்குத் தெரியுமா?

நாடு முழுவதும் இந்துக்கள் பண்டிகையான விநாயகர் சதுர்த்தி இன்று விமரிசையாகக் கொண்டாடப்படும் நிலையில், வழிபாட்டிற்கான விநாயகர் சிலை விற்பனை பட்டித்தொட்டியெல்லாம் களைகட்டி வருகிறது. விநாயகர் சிலையை வடிவமைப்பதில் சிலை வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு ஆண்டும் தங்கள் கற்பனைத்திறனைக் காண்பித்து புதுமையான மற்றும் ட்ரெண்டிங் சிலைகளை வடிவமைத்து , பக்தர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் முன்னதாக பான் இந்தியா படமாக வெளியாகி பட்டி தொட்டியெல்லாம் பெரும் ஹிட் அடித்த புஷ்பா படத்தை நினைவுகூறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ’புஷ்பா விநாயகர் சிலை’ சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகியுள்ளது. நடிகர் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியான இப்படத்தில் அல்லு அர்ஜூன் தன் தாடையை தடவும் மேனரிசமும் ஹிட் அடித்த நிலையில், இந்த மேனரிசத்துடனேயே விநாயகர் சிலை வடிவமைக்கப்பட்டு பக்தர்களைக் கவர்ந்து வருகிறது.

ganesha statues,pushpa ganesha,jailer,sale,amogam ,
விநாயகர் சிலைகள், புஷ்பா விநாயகர், ஜெயிலர், விற்பனை, அமோகம்

இதேபோல் ஜெயிலர் ரஜினி விநாயகரும் முன்னதாக சென்னையில் அறிமுகப்படுத்தப்பட்டு விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. இந்த ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண் - ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான ஆர்.ஆர்.ஆர் திரைப்பட கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு வடிவமைக்கப்பட்ட விநாயகர் சிலையும் ட்ரெண்ட் ஆகியுள்ளது.


குறிப்பாக ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ராம்சரண் நடித்த ராம் கதாபாத்திரத்தை அடிப்படையாக கொண்ட விநாகர்கள் பக்தர்களைக் கவர்ந்து வருகின்றன. அதே போல ஜூனியர் என்.டி.ஆர் புலியுடன் சண்டையிடும் காட்சியின் மாதிரியை வைத்தும் விநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்கள்.

டெல்லியைச் சேர்ந்த சிற்பியான சீதா, அவரும் அவரது குழுவினர் சேர்ந்து கடந்த ஒரு மாதத்தில் இதுபோன்ற 50 சிலைகளைச் செய்திருக்கின்றனர், விற்பனைக்கு வைக்கப்பட்ட ஒரு சில நாட்களில் அத்தனை சிலைகளும் விற்று தீர்ந்துவிட்டதாக இவர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags :
|
|