Advertisement

  • வீடு
  • செய்திகள்
  • வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

By: vaithegi Mon, 01 May 2023 10:09:25 AM

வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை குறைந்துள்ளது

சென்னை: வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைப்பு ..... சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலை மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.

இதையடுத்து இதில், பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை தினந்தோறும் என்ற அடிப்படையிலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை மாதத்தில் முதல் தேதி அல்லது மாதத்துக்கு 2 முறை என்ற அடிப்படையிலும் நிர்ணயிக்கப்படுகிறது.

gas cylinder price,commercial use , எரிவாயு சிலிண்டர் விலை,வணிக பயன்பாடு

எனவே இதன்படி, கடந்த 3 மாதங்களாகவே வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. இச்சூழலில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் கடந்த சில மாதங்களாகவே குறைத்து வந்தன.

இந்த நிலையில் ஏப்ரல் 1-ஆம் தேதி 2192.50 ஆக இருந்த வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் 2021.50 ஆக குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதன்படி சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டர் விலை ரூ,171 குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் வீடுகளில் பயன்படுத்தப்படும் 14.2 கிலோ எடைகொண்ட சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்கப்படவில்லை. இதன்படி வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.1,118.50 ஆக தொடர்கிறது.

Tags :