Advertisement

பாகிஸ்தானில் கடுமையாக விலை உயரும் பெட்ரோல்

By: Nagaraj Thu, 16 Feb 2023 10:45:05 PM

பாகிஸ்தானில் கடுமையாக விலை உயரும் பெட்ரோல்

இஸ்லாமாபாத்: கடும் விலை உயர்வு... பாகிஸ்தான் பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது.

இதனால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். ஒரு லிட்டர் பால் ரூ.210க்கு விற்கப்படுகிறது. கோழி கறி கிலோ ரூ.780.

இந்நிலையில் பாகிஸ்தானில் மீண்டும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.22.20 உயர்த்தப்பட்டு ரூ.272க்கு விற்பனை செய்யப்படுகிறது.

continuously rising,pakistan,petrol price , தொடர்ச்சியாக உயர்வு, பாகிஸ்தான், பெட்ரோல் விலை

அதேபோல் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.12.90 அதிகரித்து ரூ.202.73 ஆக உள்ளது. டீசல் ரூ.9.60 உயர்த்தப்பட்டு லிட்டருக்கு ரூ.196.68க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், பொது விற்பனை வரி 17 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.தொடர்ச்சியான விலை உயர்வின் காரணமாக மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர் .

Tags :